பாமக நிறுவனர் ராமதாஸை கூட்டணியில் சேர்ப்பது குறித்து திமுக தலைமையே இறுதி முடிவு எடுக்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். ராமதாஸ்–திருமாவளவன் நேரில் சந்தித்தால் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தில் இருவரும் நெருக்கமாக இணைந்து செயல்பட்டவர்கள் என்றும், விசிக கொடியை ராமதாஸ் ஏற்றிவைத்திருந்ததையும் அவர் நினைவூட்டினார்.