
இராம்நாடு: பாம்பு கடித்து பெண் பலியான சோகம்
ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்திரகோசமங்கையை அடுத்த ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரது மனைவி கிருஷ்ணவேணி, நேற்று மாலை விவசாய வேலைக்காக வயலுக்குச் சென்றபோது பாம்பு கடித்துள்ளது. அவரை ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதனால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
























