ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் வழிவிட்டாள் வீட்டில் பாம்பு இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், கமுதி தீயணைப்பு நிலைய அலுவலர் நாகநாதன் தலைமையில் சென்ற தீயணைப்பு வீரர்கள், தகர வேலியில் பதுங்கி இருந்த 5 அடி நீளமுள்ள கொடிய விஷ நாகப்பாம்பை உயிருடன் பிடித்து, அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்.