கமுதி: மாசிக் களரி திருவிழாவையொட்டி 508 திருவிளக்கு பூஜை

77பார்த்தது
கமுதி அருகே உள்ள கோட்டைமேடு ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீகோட்டை முனீஸ்வரர் கோயில் 48-ஆவது மாசிக் களரி திருவிழாவையொட்டி 508 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் மாசிக் களரி திருவிழா கடந்த 16-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் கோட்டை முனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன. 

கடந்த புதன்கிழமை கோட்டைமேடு, கமுதி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் 1008 பால்குடம் எடுத்தும், பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், அழகுவேல் குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை கமுதி, கோட்டைமேடு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் 508 திருவிளக்கு பூஜை செய்து வழிபட்டனர். பூஜைக்கான ஏற்பாடுகளை கமுதி ஆயுதப்படை போலீசார் செய்திருந்தனர். விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது
Job Suitcase

Jobs near you