சமூக நீதி விடுதியில் மாணவன் மீது தாக்குதல்

0பார்த்தது
இராமநாதபுரம் சேதுபதி நகரில் உள்ள அரசு சமூக நீதி மாணவர் விடுதியில், 7ஆம் வகுப்பு மாணவன் ஒருவனை, 12ஆம் வகுப்பு மாணவன் மற்றும் அவனது நண்பர்கள் மூவர் சேர்ந்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். 7ஆம் வகுப்பு மாணவன், 12ஆம் வகுப்பு மாணவனின் ரெக்கார்டர் நோட்டைக் கிழித்ததே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விடுதி காப்பாளர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்குத் தகவல் அளித்ததை அடுத்து, விசாரணை நடத்திய குழந்தைகள் நல அலுவலர், சம்பந்தப்பட்ட நான்கு மாணவர்களையும் விடுதியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி