ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் உள்ள அருள்மிகு சிநேகவல்லி அம்பாள் உடனமர் அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் சிவன் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா மே 21 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் மூன்றாம் நாள் அன்று, பூத வாகனம், மயில் வாகனம், காமதேனு வாகனம், மூஞ்சூறு வாகனம் மற்றும் கேடக வாகனங்களில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த திருவிழா வரலாற்றுச் சிறப்புமிக்கதாகக் கருதப்படுகிறது.