ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனியார் மஹாலில் எஸ். டி. பி. ஐ கட்சியின் ஒருங்கிணைந்த பூத் கமிட்டி மாநாடு நடைபெற்றது. "களத்தைத் தயாரிப்போம் 2026 இல் வெல்வோம்!" என்ற முழக்கத்துடன் நடந்த இந்த மாநாட்டில், மாநில தலைவர் நெல்லை முபாரக், மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முஹைதீன், மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்று உரையாற்றினர். இந்த மாநாடு 2026 தேர்தலை மையப்படுத்தி நடத்தப்பட்டது.