மேலவாசல் பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முருகனின் வேலுக்கு பால், தயிர் மற்றும் நறுமண வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த விழா இராமேஸ்வரம் இராமநாதசாமி திருக்கோயிலின் மேற்கு கோபுர வாசலில் அமைந்துள்ள கோவிலில் விமர்சையாக கொண்டாடப்பட்டது.