கமுதி: அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலி

69பார்த்தது
கமுதி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற முதியவர், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள செங்கப்படை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவநேசன். இவர் இரு சக்கர வாகனத்தில் கமுதி நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். பாம்புல்நாயக்கன்பட்டி அருகே சென்றபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கமுதி காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you