ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தக்கடலில் நேற்று (மே 31) ராஜஸ்தான் பக்தர்கள் பணப்பையை திருட முயன்ற முதியவர், பிடிபட்டதும் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் பக்தர்களின் பணப்பையை திருட முயன்றபோது பிடிபட்டார். பின்னர் போலீசாரிடம் ஒப்படைக்க முயன்றபோது, அங்கிருந்து தப்பிக்க முயன்ற முதியவர் கடலில் குதித்தார். ராமேஸ்வரம் கடலோர போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.