ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தின் போது, ஓய்வெடுக்க அமர்ந்திருந்த 90 வயது பாலம்மாள் என்ற மூதாட்டியின் கை கல் இருக்கையின் இடுக்கில் சிக்கியது. அரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு போலீசார் அவரை மீட்டனர். சொத்து பிரச்சனை தொடர்பாக மனு அளிக்க வந்திருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.