ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சுந்தராபுரம் அருகே உள்ள பழைய பொருட்கள் வாங்கும் கிடங்கில் திங்கள்கிழமை (நவ. 6) காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பழைய டுவீலர்கள், உதிரி பாகங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் தீப்பிடித்து எரிந்தன. இதனால் கரும்புகை கமுதி நகரம் முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.