ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே எம்.வி. பட்டினம் மீனவர்கள், மீன்வளத் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட தங்கள் படகை விடுவிக்கக் கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம், புதுக்குடி கடல் பகுதியில் கரைவலை முறையில் மீன் பிடித்ததாகக் கூறி படகு பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மீனவர்களுடன் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். படகை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து, மீனவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.