கமுதி: முனீஸ்வரர் கோயிலில் 128 ஆடுகள் பலி; அசைவ அன்னதானம்

456பார்த்தது
கமுதி: முனீஸ்வரர் கோயிலில் 128 ஆடுகள் பலி; அசைவ அன்னதானம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருமாள் தேவன்பட்டி கிராமத்தில் உள்ள அருள்மிகு சுயம்பு தர்ம முனீஸ்வரர் கோவிலில் வைகாசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நேர்த்திக்கடனாக, பக்தர்கள் நேர்ந்துகொண்ட 128 ஆடுகள் சுவாமிக்கு பலியிடப்பட்டன. பின்னர், பலியிடப்பட்ட ஆடுகளைக் கொண்டு அசைவ பிரசாத உணவு தயாரிக்கப்பட்டு, கமுதி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வந்திருந்த சுமார் 10,000-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி