முதுகுளத்தூர்: மதுக்கடையை மூட வலியுறுத்தி கிராம மக்கள் முற்றுகை

476பார்த்தது
முதுகுளத்தூர் அருகே திருவரங்கம் கிராமத்தில் அரசு உதவி பெறும் பள்ளி அருகே செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையை மூட வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மதுபான கடையால் அடிக்கடி சட்ட ஒழுங்குப் பிரச்சினை ஏற்படுவதாகவும், இதை அகற்றக் கோரி கடந்த 2023 ஆம் ஆண்டு கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி