இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி கோவிலைச் சுற்றி இருந்த நடைபாதை கடைகள் அகற்றப்பட்டதை கண்டித்து, வியாபாரிகள் இராமேஸ்வரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவில் அருகே மீண்டும் கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளை போலீசார் கைது செய்தனர்.