இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில், இலங்கை அகதிகள் மறுவாழ்வு திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, முகாம் வருவாய் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தனது உறவினர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்ததாகக் கூறி, முகாமில் வசிக்கும் இலங்கை அகதிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முகாமில் பண மோசடி நடந்ததாகக் கூறி அகதிகள் முற்றுகையிட்டனர்.