ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை பகுதியில் பழைய நகராட்சி கட்டடத்தை இடித்து புதிய கட்டடம் கட்டுவது தொடர்பாக நடைபெற்ற பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டத்தில், கேள்வி கேட்டவரை திமுகவை சேர்ந்த துணை சேர்மன் ஹமீது சுல்தான் தள்ளிவிட்டு தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.