ராமேஸ்வரம் தனுஷ்கோடி பகுதியில் முறையான வாகன நிறுத்துமிடம் இல்லாததால் தினந்தோறும் கடுமையான
போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் உடனடியாக பக்தர்களின் நலன் கருதி முறையான வாகன நிறுத்துமிடம் அமைத்து தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.