ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே ஆராய்ச்சிநகரில் சாலை ஓரத்தில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த பஞ்சவர்ணம் (45) மற்றும் ஜெயமணி (50) ஆகியோர், வேகமாக வந்த மதுபோதை ஓட்டுநர் ஓட்டிச் சென்ற கார் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். அபிராமத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் இளவரசன் (42) தப்பியோடிவிட்ட நிலையில், அவரை சாயல்குடி போலீசார் தேடி வருகின்றனர்.