ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், ₹32 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பீட்டில் இரண்டு புதிய வகுப்பறைகள் கட்டும் பணி ஓராண்டாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்ட நிதியில் தொடங்கப்பட்ட இப்பணிகள் எவ்வித முன்னேற்றமும் இன்றி முடங்கிக் கிடப்பதால் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது.