பாம்பன் பாலத்தில் பலத்த காற்று: ரயில்கள் நிறுத்தம்

0பார்த்தது
பாம்பன் பாலத்தில் பலத்த காற்று: ரயில்கள் நிறுத்தம்
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதால், அயோத்தியாவிலிருந்து வந்த விரைவு ரயில் பாதுகாப்பு கருதி மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. காற்றின் வேகம் குறைந்த பின் ரயில் மீண்டும் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி