கடலாடி தாலுகா பகுதிகளில் நேற்றிலிருந்து பலத்த காற்று வேகமாக வீசி வருகிறது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் பல இடங்களில் மின் கம்பங்கள் சேதமடைந்து உள்ளன. குறிப்பாக வாலி நோக்கம், கீழச்செல்வனூர் போன்ற இடங்களில் மின் கம்பங்கள் சேதமடைந்து உள்ளன. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளான நிலையில், தகவல் அறிந்த மின்சாரத் துறை ஊழியர்கள் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று சேதமடைந்த மின்கம்பங்களை அகற்றி, புதிய மின்கம்பங்கள் நடும் பணிகளையும் சீரமைப்பு பணிகளையும் மேற்கொண்டனர்.