ஆர்.எஸ்.மங்கலம்: வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது

0பார்த்தது
ஆர்.எஸ்.மங்கலம்: வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது
ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட வெள்ளைச்சாமி (35) மற்றும் அய்யப்பன் (56) ஆகியோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். மதுரை மத்திய சிறையில் பழக்கம் ஏற்பட்ட இவர்கள், தனியாகச் செல்லும் பெண்களிடம் வழிப்பறி செய்தது விசாரணையில் தெரியவந்தது. வெள்ளைச்சாமி மீது 40, அய்யப்பன் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகளும் உள்ளன. எஸ்.பி. சந்தீஷ் பரிந்துரையின் பேரில், கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். அதன்படி இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி