ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே நெறிஞ்சிப்பட்டி கிராமத்தில் சேதமடைந்த அங்கன்வாடி மையத்திற்குப் பதிலாக புதிய கட்டிடம் கட்ட அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், கட்டிடம் கட்டத் தீர்மானிக்கப்பட்ட காளியம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி, அந்த நிலத்தை மீட்டுத் தரக்கோரி 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.