பழைய பாம்பன் ரயில் பாலம் அகற்றும் பணி தீவிரம்

557பார்த்தது
பழைய பாம்பன் ரயில் பாலம் அகற்றும் பணி தீவிரம்
பழைய பாம்பன் ரயில் பாலத்தை அகற்றும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. புதிய ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், பழுதடைந்த பழைய பாலத்தை அப்புறப்படுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக சுமார் 2.89 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 21-ஆம் தேதி பூமி பூஜையுடன் தொடங்கிய அகற்றும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. ஊழியர்கள் கேஸ் சிலிண்டர்கள் மற்றும் நவீன கருவிகளைக் கொண்டு பாலத்தின் இரும்புத் தூண்கள், தண்டவாளங்களை அகற்றி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி