
பரமக்குடியில் லஞ்சம் பெற்ற அரசு அதிகாரி கைது
பரமக்குடியில், எஸ். அண்டக்குடியில் உள்ள இடத்தை வரன்முறைப்படுத்தல் (பிளாட் அமைக்க) கட்டணம் செலுத்தியும், உள்ளாட்சி அனுமதிக்கு துணை BDO இளங்கோவன் ரூ. 1 லட்சம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. மனுதாரர் ஊழல் தடுப்பு போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் ரூ. 50,000 பணத்தை இளங்கோவனுக்குக் கொடுத்தபோது, லஞ்சம் பெற்ற துணை BDO இளங்கோவனை போலீசார் கைது செய்தனர்.























