போகலூர் ஒன்றியத்தின் சார்பில் சத்திரக்குடி பேருந்து நிறுத்தம் முன்பு 'தமிழகம் தலை குனியாது' என்ற பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக அரசு செய்து வரும் நலத்திட்டங்கள் மற்றும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஒன்றிய கழக செயலாளர் கதிரவன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ. கே. எஸ். விஜயன், மாவட்ட கழக செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.