ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், ஒரே டூவிலரில் சென்ற மூன்று இளைஞர்கள் மீது தனியார் பேருந்து மோதியதில், 22 வயது இளைஞர் சபரிவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரும் படுகாயமடைந்து பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துயரச் சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.