இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கலைஞர் நகர் 2-வது தெருவில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையால் வீடுகள் இடுப்பளவு நீரில் மூழ்கியுள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் அரிசி, பால் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்கக்கூட வெளியே செல்ல முடியாமல் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். மழை தொடர்ந்து பெய்து வருவதால் நீர் தேங்கி நிற்கிறது.