கழிவுநீரில் மூழ்கிய அங்கன்வாடி மையம்

0பார்த்தது
ராமநாதபுரம் வடக்கு தெரு யானைக்கல் வீதியில் உள்ள அங்கன்வாடி மையம் பாதாள சாக்கடை உடைப்பால் கழிவுநீர் சூழ்ந்துள்ளது. இதனால் குழந்தைகள் கழிவுநீரில் நடந்து பள்ளிக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கொசு, புழுக்கள் பெருகுவதால் தொற்று நோய் அபாயம் அதிகரித்துள்ளது. முன்பு நிரம்பி வழிந்த மையத்தில் தற்போது விரல் விட்டு எண்ணக் கூடிய குழந்தைகளே வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் உடனடியாக சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

தொடர்புடைய செய்தி