திருவாடானை: பைக் மீது கார் மோதி 2 பேர் பலி

695பார்த்தது
திருவாடானை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், சிவகங்கை மாவட்டம் தளுதனூர் பகுதியைச் சேர்ந்த சமையல் தொழிலாளிகளான கருப்பையா (60) மற்றும் இவரது உறவினரான குமரேசன் (70) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இருவரும் சமையல் வேலை சம்பந்தமாக திருவாடனையில் இருந்து ஆர். எஸ். மங்கலம் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி