பரமக்குடி அருகே நகரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ கீழ முனியய்யா சுவாமி ஆலயம் மற்றும் ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் சிவராத்திரியை முன்னிட்டு முதலாம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிகள் நடைபெற்றன. மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 12 காளைகளும், ஏராளமான மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். நிர்ணயிக்கப்பட்ட நேரங்களில், வீரர்கள் சீறிப்பாய்ந்த காளைகளை லாவகமாக அடக்கி பிடித்தனர். சில காளைகள் அடங்க மறுத்து வீரர்களை தூக்கி வீசியதும் நிகழ்ந்தது.