பரமக்குடி அருகே பூவிளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 85 வயதான வேலு, கண்மாயில் குளிக்கச் சென்றபோது நிலை தடுமாறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவரது உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டனர். பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சத்திரக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.