90 நாட்களாக இலங்கை சிறையில் வாடும் பாம்பன் மீனவர்களின் குடும்பத்தினருக்கு தவெக சார்பில் மண்டபம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ரைமண்டு தலைமையில், மாவட்ட கழக செயலாளர் மலர்விழி ஜெயபாலா ஆறுதல் கூறினார். மேலும், 12 மீனவர்களையும்
விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த அவர், 12 மீனவர்களின் குடும்பத்தினருக்கும் மொத்தமாக ரூ. 60 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். இந்த நிகழ்வில் பாம்பன் மீனவர் சமூகத்தின் தலைவர்கள், தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.