பாம்பன் விசைப்படகு மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அக்டோபர் 7 அன்று கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் 18 மாத சிறை தண்டனை விதித்தது. இந்த தண்டனையை ரத்து செய்ய இந்திய அரசு மேல்முறையீடு செய்யக் கோரி, இலங்கை சிறையில் வாடும் மீனவர்களின் குடும்பத்தினர் ராமநாதபுரத்தில் இன்று நடைபெற்ற மீனவர் குறை நாள் கூட்டத்தில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.