முதுகுளத்தூர் அதிமுக மத்திய ஒன்றிய கழகம் சார்பில், தஞ்சை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பூக்கடை மகேந்திரன் நினைவாக மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அதிமுக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், எடப்பாடி ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என வலியுறுத்தி அவர் உயிர்த்தியாகம் செய்ததாக தெரிவிக்கப்பட்டது. முதுகுளத்தூர் பேருந்து நிலையம் முன்பு அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.