ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பேருந்து நிலையத்தில் அமைச்சர் ராஜீவ் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள இலவசக் கழிப்பறை சுகாதாரமற்ற நிலையில் காணப்பட்டதால், அதிகாரிகளுக்கு "சஸ்பெண்ட் ஆயிடாதீங்க" என கடும் எச்சரிக்கை விடுத்தார். முன்னதாக, சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது வி.கே. ராஜீவ் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.