ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே இன்று (பிப்ரவரி 24) காலை, 30 மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளிக்குச் சென்ற தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி வாகனம் மீது லாரி மோதியதில் நிலைதடுமாறி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த 30 மாணவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.