ராமநாதபுரம்: கேள்வி கேட்டவரை தாக்க முயன்ற திமுக நகர்மன்ற துணைத் தலைவர்

0பார்த்தது
ராமநாதபுரம்: கேள்வி கேட்டவரை தாக்க முயன்ற திமுக நகர்மன்ற துணைத் தலைவர்
கீழக்கரை நகராட்சியின் பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் முழுமையடையாத நிலையில், நல்ல நிலையில் உள்ள கட்டிடத்தை ஏன் இடிக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் இளைஞர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் இளைஞர்கள் கேள்விகளை முன்வைத்தனர். கூட்டம் முடிந்ததும், திமுகவைச் சேர்ந்த நகர்மன்ற துணைத் தலைவர் ஹமீது சுல்தான், கேள்வி கேட்ட இளைஞரைத் தள்ளிவிட்டுத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி