இராமேஸ்வரம் ஸ்ரீ இராமநாதசுவாமி கோவிலுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ நம்பு நாயகி அம்மன் கோயிலில் இன்று, பிப். 20, வெள்ளிக்கிழமை அன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் மற்றும் தீப ஆராதனைகள் நடைபெற்றன. சுற்றுவட்டார பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.