ராம்நாடு: வெளுத்து வாங்கும் கனமழை!

479பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டத்தில் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வந்தது. தற்போது போகலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான சத்திரக்குடி, மென்னந்தி, முத்துவயல், எட்டிவயல் உள்ளிட்ட கிராமங்களில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.