முதுகுளத்தூர் அருகே சங்ககால தமிழி நடுகல் கல்வெட்டு

0பார்த்தது
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே ஆப்பனூர் கிராமத்தில் உள்ள அரியநாச்சியம்மன் கோவிலில், 2000 ஆண்டுகள் பழமையான நடுகல் தமிழிக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரத்தில் கிடைத்த முதல் நடுகல் தமிழிக் கல்வெட்டு இதுவாகும். இந்த அரியநாச்சியம்மனை சுற்றியுள்ள 448 கிராமங்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இங்கு சோழர்களின் குலதெய்வமான நிசும்பசூதனி அரியநாச்சி அம்மனாக அருள்பாலிக்கிறார். கோவிலின் தெற்கே ஒரு தனிக்கல்லில் இந்த கல்வெட்டு காணப்படுகிறது.

தொடர்புடைய செய்தி