கீழக்கரை சொக்கநாதர் தெருவில் உள்ள குப்பாதம்மாள் சொக்கநாதர் கோயிலில், பிள்ளை காளியம்மனுக்கு இன்று, பிப்ரவரி 17 அன்று மாலைகள் அணிவித்து பூஜைகள் மற்றும் தீப ஆராதனைகள் நடைபெற்றன. இதில் அப்பகுதி பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இக்கோயிலில் ஒரு வாரமாக மாசி களரி திருவிழா நடைபெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.