ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ஓரியூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில், தேசிய நெடுஞ்சாலைத்துறையால் 5.6 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்திற்கான பைபாஸ் சாலை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், ஆற்றின் தண்ணீர் செல்லாதவாறு அடைக்கப்பட்டதால் விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது.