திருவாடானை: ஆதிரெத்தினேஸ்வரர் கோவில் வைகாசி விழா கோலாகலம்

517பார்த்தது
திருவாடானை: ஆதிரெத்தினேஸ்வரர் கோவில் வைகாசி விழா கோலாகலம்
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் உள்ள அருள்மிகு சிநேகவல்லி அம்பாள் உடனமர் அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் திருக்கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழா மே 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் நான்காம் நாள் பஞ்ச மூர்த்திகளின் சிறப்பு வீதி உலா நடைபெற்றது. விநாயகர் மூஞ்சூறு வாகனத்திலும், முருகன் மயில் வாகனத்திலும், ஆதிரெத்தினேஸ்வரர் கைலாச வாகனத்திலும், சினேகவல்லி அம்பாள் காமதேனு வாகனத்திலும், சண்டீகேஸ்வரர் கேடக வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

தொடர்புடைய செய்தி