
மண்டபத்தில் மகன் உயிரிழந்த நிலையில் தந்தையும் தற்கொலை
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில், கடலில் இருந்து வீடு திரும்பிய மீனவர் களஞ்சியம் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது மரணச் செய்தி கேட்டு துக்கம் தாங்காமல் தந்தை சேகர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இருவரது உடல்களையும் போலீசார் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
























