கருணாநிதியின் 102வது பிறந்தநாள் விழா

50பார்த்தது
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு ராமநாதபுரம் வடக்கு நகரச் செயலாளரும் நகர் மன்ற தலைவருமான கார்மேகம் தலைமையில் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணாவின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதனைத் தொடர்ந்து கருணாநிதியின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், உணவு பொட்டலங்கள் வழங்கியும், வெடி வெடித்தும் சிறப்பாக முறையில் கொண்டாடி மகிழ்ந்தனர். 

அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் நகர் முழுவதும் சிறப்பான முறையில் கருணாநிதியின் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்வில் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள், மகளிர் அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர். இந்நிகழ்வில் ஏராளமான திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி