ராமேஸ்வரம் மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாகக் கூறி 2 விசைப்படகுகளையும், 12 மீனவர்களையும் கைது செய்தனர். ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள், மார்ச் 4 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.