12 வயது சிறுவன் மீது டாடா ஏஸ் வாகனம் மோதி உயிரிழப்பு

79பார்த்தது
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா, கீரணி பகுதியைச் சேர்ந்த அரங்கநாதன் - சுதா தம்பதியினரின் 12 வயது மகன் தீபநாதன், திருவாடானை அருகே கல்லூர் பகுதியில் பாட்டி வீட்டிற்கு வந்திருந்தபோது, சாலையோரம் நின்று கொண்டிருந்த அவன் மீது தண்ணீர் கேன் ஏற்றி வந்த வாகனம் மோதியது. இதில் அச்சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். கோடை விடுமுறையை கழிக்க வந்த இடத்தில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி